Saturday, September 15, 2012

தமிழா !!


 
வள்ளுவன் தந்த வளர்தமிழ் இருக்கு
அண்ணல்  தந்த உண்மை இருக்கு!
கம்பன் தந்த கவிதை இருக்கு!
மழலை மொழியில் தெய்வம் இருக்கு!
தமிழா கவலை எதற்கு! - தாய்
தமிழே துணை உயிர்க்கு!

உழவன் தந்த கரும்பு இருக்கு!
கண்மணி போன்று நெல்மணி  இருக்கு!
கழனியில் விளைந்து நிறைந்து இருக்கு!
கனிகள் கனிந்து கமழ்ந்து இருக்கு!
தமிழா கவலை எதற்கு! - இங்கு
இல்லாமை இனி எதற்கு !

பாலும் பருப்பும் கலந்து இருக்கு!
பூந்தமிழ் மணக்கும் பொங்கல்  இருக்கு!
பருத்தி தந்த ஆடை இருக்கு!
தோப்பு நிறைய தென்னை இருக்கு!
தமிழா கவலை எதற்கு! - உழைப்பாய்
காலம் கனியும் உனக்கு



2 comments:

  1. வணக்கம்

    மல்லன் அளித்த மணிக்கவிதை என்னெஞ்சை
    அல்லும் அழகை அளித்ததுவே! - வெல்லெமெனச்
    சொல்லும் சுவையைச் சுரக்கின்ற செந்தமிழைச்
    செல்லும் வழியெலாம் செம்பு

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr
    பதிலளிநீக்கு

    ReplyDelete
    Replies
    1. கவிஞா் அவா்களுக்கு வணக்கம்

      முத்தாக முதல் கருத்துரை வெண்பா
      சொத்தாக எண்ணிக் காத்திடுவேன்

      சந்தக் கவிதைகளைச் சொந்த உறவென
      வந்த கவிஞா் வலைப்பதிவில் - தந்தகவி
      சிந்தையில் நின்று சிரிக்கிறது! என்கவியால்
      வந்தனை செய்தேன் வளைந்து!

      கவிஞா் மாமல்லன்

      Delete